ஆட்டோ, டாக்ஸிகளுக்கு டிஜிட்டல் மீட்டர் செயலி: அமைச்சர் ப.ராஜ்குமார் அறிவிப்பு
ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், பயணிகளுக்கு நியாயமான பயணக்கட்டணத்தை உறுதி செய்யவும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து அதிகார அமைப்பால் (CUMTA) புதிய டிஜிட்டல் மீட்டர் செயலி உருவாக்கப்பட்டு விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் அறிவித்துள்ளார்.
இந்த புதிய செயலி மூலம் ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே வெளிப்படையான கட்டண முறை அமலுக்கு வருவதுடன், பொதுமக்களின் பயண அனுபவமும் எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




