தொழில் முனைவோருக்கு ‘மூன்றாம் தரப்பு’ சான்றளிப்பு முறை: அமைச்சர் ப.ராஜ்குமார் அறிவிப்பு
தொழில் முனைவோர் எளிதாகத் தொழில் தொடங்குவதற்கான சூழலை மேம்படுத்தும் நோக்கில், முதன்முறையாக மூன்றாம் தரப்பு சான்றளிப்பு (Third Party Certification) முறை அறிமுகப்படுத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் இது குறித்துத் தெரிவித்த வீட்டு வசதித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார், சிட்கோ (SIDCO), சிப்காட் (SIPCOT), எல்காட் (ELCOT) மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழிற்சாலை மனைப்பிரிவுகளில் அமையும் 26,900 சதுர அடி (2,500 சதுர மீட்டர்) கட்டடப் பரப்பளவு வரையிலான தொழிற்சாலைக் கட்டடங்களுக்கு மூன்றாம் தரப்பினர் மூலமாகக் கட்டட விதிமுறைகளை நிறைவு செய்வதை உறுதிசெய்து ஒப்புதல் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த புதிய நடைமுறையின் மூலம் அனுமதி பெறும் வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டு தொழில் நிறுவனங்களின் பணிகள் விரைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




