பேனா சிலை அவசியமா?: சட்டசபையில் எ.வ.வேலு பேச்சு
கடலில் பேனா சிலை அமைப்பது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேசியதற்கு தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துப் பதிலடி கொடுத்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நினைவாகப் பேனா சிலை வைக்க வேண்டும் என்று இலக்கியவாதிகள் மற்றும் எழுத்தாளர்கள் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, கடலில் சிலை அமைக்க ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது.
இருப்பினும், மாநிலத்தின் நிதிநிலைமை சரியாக இல்லாத இந்தக் காலகட்டத்தில் “பேனா சிலை அமைப்பது அவசியமா?” என்று கேள்வி எழுப்பிய அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், பொருளாதார நிலைமை சீரடைந்த பின்னரே அந்தச் சிலையை வைக்கலாம் எனக் கூறி அத்திட்டத்தை ரத்து செய்தார் என்று எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




