நன்றி கெட்ட உணர்வை வெளிப்படுத்தி விடுமோஎன்று அச்சப்படுகிறேன்’: அமைச்சர் ஷாஜகானுக்கு தமிமுன் அன்சாரி பதில்
சிறுபான்மையினருக்கு 20க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்ட ஒரே அரசு தவெக அரசு, அதற்காக முதல்வர் ஜோசப் விஜய்க்கு சிறுபான்மை சமுதாயம் நன்றி கடன்பட்டிருக்கிறது – ஐ.யு.எம்.எல். அமைச்சர் ஷாஜகான் பேச்சு.
“யார் தங்களுக்கு ஆதரவு கொடுத்தாலும் சிறுபான்மையினர் கொண்டாடுவார்கள். கடந்த காலங்களில் அதிமுக, திமுக ஆட்சிகளில் சிறுபான்மையினருக்குச் செய்த நல்ல விஷயங்களைப் பாராட்ட வேண்டும். நாங்கள் மட்டும் தான் செய்திருக்கிறோம், வேறு யாரும் செய்யவில்லை என்று சொல்ல வேண்டாம். உங்கள் கோரிக்கைகளைப் பாராட்டுகிறேன். மற்றவர்களைத் தாழ்த்திவிடாதீர்கள். அது நன்றிகெட்ட உணர்வை வெளிப்படுத்திவிடுமோ என்று அச்சப்படுகிறேன்” – அமைச்சர் ஷாஜகானின் பேச்சுக்கு மஜக எம்எல்ஏ தமிமுன் அன்சாரி பதில்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




