அடுக்குமாடி குடியிருப்புகளில் ரூ.355 கோடியில் புதிய வசதிகள்: அமைச்சர் ப.ராஜ்குமார் அறிவிப்பு
சென்னை மற்றும் இதர நகரங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியப் பராமரிப்பில் உள்ள 208 திட்டப்பகுதிகளில் அமைந்துள்ள 1,39,710 அடுக்குமாடி குடியிருப்புகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கில், சேவைத் துறை கட்டணங்கள், சாலைகள், நடைபாதைகள், குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றம் மற்றும் மின் விநியோகப் பாதுகாப்பு போன்ற முக்கிய நகரப்புறக் குடிமை உள்கட்டமைப்பு வசதிகளைப் புதிதாக அமைக்கவும், மேம்படுத்தவும் ரூ.355 கோடி திட்ட மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்படும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் அறிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





