திருவாடானை அருகே வீட்டை உடைத்து நகை பணம் திருட்டு

திருவாடானை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை பணத்தை திருடிச் சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், திருவாடானை அருனே ருத்திரன்பட்டியைச் சேர்ந்தவர் சோனைமுத்து மகன் ரவி(45) என்பவர் திருப்பூரில் ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கற்பகம்(38) தனது பிள்ளைகளுடன் கண்ணங்குடியில் வசித்து வருகிறார்.

 

இன்று திங்கள் கிழமை காலை வீடு திறந்திருப்பதாக தகவல் சொன்னதின் பெரில் கற்பகம் சென்று பார்த்த போது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 18 பவுன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம மனிதர்கள் திருடிச் சென்ற விவரம் தெரிய வந்தது. அதிர்ச்சியுற்ற கற்பகம் திருவாடானை காவல் நிலையத்தில் புகார் கொத்தார் புகாரின் பேரில் காவல் நிலையத்தார் விசாரித்து வருகிறார்கள்.


Leave a Reply