பனை மரத்து கல் குடித்து விட்டு லஞ்சம் கேட்ட காவலர் ஆயுதபடைக்கு மாற்றம் ! இராமநாதபுரம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது !!

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் தொண்டி காவல் நிலையத்தில் ராம்குமார் என்பவர் தனிபிரிவு காவலர் இவர் புத்துவயல் கிராமத்தில் பனங்கல் குடித்து கொண்டு பணம் கேட்டு கொண்டு இருக்கிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர் மீது இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஐ.பி.எஸ் அவர்கள் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் உண்மை தன்மை அறிய உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

 

இது போன்ற சட்டவிரோத செயல்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுக்க வேண்டிய தனிப்பிரிவு காவலரே 5000முதல் 10000 வரை கொடுத்து விட்டு விற்பனை செய்யுங்கள். என்று கூறியது காவல்துறை மத்தியில் மிகுந்த மனவேதனை அளிக்கும் வகையில் அமைந்ததாக கருதப்படுகிறது இந்நிலையில் தான் இவரை மாவட்ட எஸ் பி ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு உள்ளார் என்று கூறப்படுகிறது.


Leave a Reply