கோவையில் கல்லுக்குழியில் குளிக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மதுக்கரை குவாரி பேருந்து நிலையம் அருகே ஐஎன்டியூசி அலுவலகம் பின்புறம் உள்ள சூட்டிங் ரேஞ் பகுதியில் குடியிருப்பவர் ராஜேந்திரன். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் சிவா (வயது 8),மற்றும் அதே பகுதியில் குடியிருப்பவர் ரமேஷ். இவருடைய மகன்கள் தினேஷ்(வயது 8) மற்றும்,கார்த்திக்(வயது 8).
இவர்கள் இருவரும் சகோதரர்கள்.மேலும், இவர்கள் 3 பேரும் சூட்டிங் ரேஞ் பகுதியில் உள்ள 40 அடி ஆழம் உள்ள கல்குவாரிக்கு சொந்தமான கல்லுக்குழியில் குளிக்க சென்றுள்ளனர்.இதில் எதிர்பாராத விதமாக மூன்று பேரும் தவறி விழுந்துள்ளனர்.அப்போது,நீரில் மூழ்கி மூச்சுத்திணறி மூன்று பே௫ம் உயிர் இறந்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவை தெற்கு தீயணைப்புத்துறையினர் மற்றும் மதுக்கரை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பல மணி நேர தேடுதலுக்கு பின்னர் இரண்டு பேரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
மேலும், மற்றுமொரு குழந்தையின் உடலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தொடர்ந்து கோவை தெற்கு தீயணைப்புப் படை வீரர்களும் ,மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில் மதுக்கரை காவல்துறையினரும் தேடி வருகின்றனர்.இச்சம்பவம் குறித்து மதுக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கல் குவாரிக்கு சொந்தமான கல்லுக்குழியில் மூழ்கி சிறுவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.