இராமநாதபுரத்தில் திறப்பு விழா கண்ட ஒரு வருடத்தில் மூடு விழா காணும் அரசு மருத்துவமனை வளாகம் !

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் பல்வேறு விதமான சிகிச்சை பெற வந்த வண்ணம் உள்ளனர்.இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வலி மற்றும் நோய் தணிப்பு சிகிச்சை மையம் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் திறந்து வைத்தார்.

இந்த புதிய கட்டிடத்தில் மரணத்தருவாயில் உள்ளோருக்கு ஆதரவு சிகிச்சைகள், சரிவிகித உணவு ஆலோசனை வாய் பராமரிப்பு படுக்கை புண்கள் பராமரிப்பு சிகிச்சை, ஒருவரின் உடல் மற்றும் மனநிலையினை மதிப்பீடு செய்தல் சிகிச்சை,நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு ஆலோசனை மற்றும் ஆதரவு அளித்தல், சிறை வலி கரைசல்கள் மற்றும் ஊசி போடுதல் சிகிச்சை, மூக்கு- வாய் வழி குழாய் செலுத்துதல், சிறுநீர் குழாய் பொருத்துதல், புண்கள் மற்றும் காயங்களுக்கான சிகிச்சை, வாய் பராமரிப்பு, குடல் பராமரிப்பு- எனிமா கொடுத்தல் கழிவுகளை, வயிற்றுப் பகுதியில் உள்ள நீரை எடுத்தல், நிணநீர் சரப்பிகளின் வீக்கங்கள் மதிப்பீடு செய்தல் மற்றும் சிகிச்சை பராமரிப்பு, பெருங்குடல் திறந்த நிலையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை, கண் பராமரிப்பு, உடற்பயிற்சி, படுக்கை குளியல், இரத்த அழுத்தம் உடல் வெப்பநிலை கண்டறிதல், தேவைப்படின் மருந்துகளும் வழங்கப்படும்.

தங்களுக்கான முதலுதவிகளை தாங்களே செய்துகொள்வது பற்றிய பயிற்சி அளிக்கப்படும் என்ற வாசகங்கள் பொருந்திய சுவரொட்டியும் இந்த வளாகத்தில் ஒட்டப்பட்டு காட்சிப் பொருளாகவே காணப்படுகிறது.மேலும் இந்த வலி மற்றும் நோய்த் தணிப்பு சிகிச்சை மையத்தில் மருத்துவர்கள் செவிலியர்கள் இல்லாத குறைபாடு காரணமாக இந்த வளாகம் பூட்டப்பட்டு உள்ளதா என்று இங்கு வரும் மக்களும் சமூக ஆர்வலர்களும் முணுமுணுத்தவாறு செல்கின்றனர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்த மாவட்டத்தின் அமைச்சராக உள்ள டாக்டர் மணிகண்டன் இதன் மீது சிறப்பு கவனம் செலுத்துவார்களா !!


Leave a Reply