கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த வாலிபர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழப்பு !

Publish by: --- Photo :


இராமநாதபுரம் ரோமன் சர்ச் அருகில் ஸ்டேட் பாங்க் மற்றும் தங்கமயில் ஜுவல்லரிக்கும் இடைவெளியில் புதிய கட்டிட வளாகம் நடைபெற்று வருகிறது. இந்த கட்டிட வளாகத்தில் பணிபுரிந்த திருச்சுழி தாலுகா நரிக்குடி (மேல குளம்) சேர்ந்த மணி வயது 33 தந்தை பெயர் போஸ். இவர் முதல் மாடியில் சுமார் 6 மணி அளவில் வேலை செய்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் அவரை மீட்டு இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்தார் என்று கூறினார்கள். தற்போது இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மேலும் உயிரிழந்த மணி நிலைதடுமாறும் போது மணியை காப்பாற்ற சென்ற முனியசாமி என்ற வாலிபரும் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இவரும் அதே ஊரைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.


Leave a Reply