காங்கிரஸ் கட்சியின் கராத்தே தியாகராஜன் விரைவில் ! அ ம மு க- வா !! இல்லை ரஜினியின் பக்கமாக !!!

தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜனை நீக்கம் செய்து உள்ளது மாநில தலைமை நிர்வாகம் இவர் அரசியல் மற்றும் கராத்தே பயிற்சியாளராவார் கராத்தே தியாகராஜன்.இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் (1986-1996,1998-2001, 2006-2019)வரை. மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் (1996-1998)வரை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் (2001-2005)வரை.இவர் அகில இந்திய கராத்தே கூட்டமைப்பின் தலைவராக இருந்து பின்னர் நிதி கையாடல் தொடர்பான சர்ச்சைகளை அடுத்து பதவி விலகினார்,என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு இந்திய கராத்தே சங்கம் (கே.ஏ.ஐ) என்ற அமைப்பைத் தொடங்கி அதன் தலைவராகவும் உள்ளார். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ஆதரவாளர்.இருப்பினும் தற்போது உள்ள சூழ்நிலையில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காததால், டி டி வி தினகரன் பக்கம் செல்ல அதிக அளவில் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது.


Leave a Reply