--- --:--:-- --

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்தது – நீர்மட்டமும் சரிவு

9

மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 4,822 கன அடியாக சரிந்து உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 400 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

 

 

கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ள அதே சமயம், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 91.50 அடியாக குறைந்துள்ளது. அதே நேரம் மேட்டூர் அணையின் நீர் இருப்பு 54.38 டிஎம்சி-ஆக உள்ளது.

 

 

இதனிடையே மேட்டூர் அணைக்கான நீர் வரத்து குறைந்துள்ளது பற்றி தகவல் தெரிவித்துள்ள அதிகாரிகள், காவிரியின் நீர் பிடிப்புப்பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும் கர்நாடகம் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்க மறுப்பதாலும் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,822 கனஅடியாக குறைந்துள்ளதாக குறிப்பிட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon