வரும் காலங்களில் இயற்கை சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்பகளை கண்டு பிடிப்பதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் – இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னால் இஸ்ரோவின் தலைவர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை,நாட்டில் விவசாயம் முதல் அறிவியல் துறை வரை விஞ்ஞானிகள் தேவை அதிகமாக இருப்பதாகவும், வரும் காலங்களில் இயற்கை சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்பகளை கண்டு பிடிப்பதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.கே.பி.ஆர். பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் சார்பாக நெஸ்ட் 2019 எனும் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் கண்காட்சி நடைபெற்றது.

 

ஐந்து தலைப்புகளில் நடைபெற்ற இதில் கோவை,திருப்பூர்,ஈரோடு என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100 பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகளின் 600 கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இது 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும்,11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் நடைபெற்றது.

இக்கண்காட்சியில் ரோபோட்டிக்ஸ், விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆபத்துக் காலத்தில் உதவும் எமர்ஜென்சி விளக்குகள், வானவியல் உண்மைகள், கடல்வாழ் உயிரினங்களைத் காப்பாற்றத் தேவையான உபகரணங்கள், மாசுபாடு குறித்த ஆய்வுகள் அதைக் கட்டுப்படுத்தும் முறைகள் எனப் பலவிதமான மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் சிறந்த படைப்புகளுக்கான பரிசளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கே.பி.ஆர். குழுமங்களின் மேலாண் இயக்குனர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றத்தின் துணை தலைவர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.அப்போது அவர்,நாட்டில் விவசாயம் முதல் அறிவியல் துறை முதல் விஞ்ஞானிகள் தேவை அதிகமாக இருப்பதாகவும், வரும் காலங்களில் இயற்கை சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்பகளை கண்டு பிடிப்பதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என தெரிவித்தார்.இந்த அறிவியல் கண்காட்சியை 6000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வையிட்டனர்.


Leave a Reply