இராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு இலவச லேப் டாப், பள்ளிகளுக்கு உயர் பரிணாம செட் டாப் பாக்ஸ் வழங்கும் விழா

இராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு இலவச லேப் டாப், பள்ளிகளுக்கு உயர் பரிணாம செட் டாப் பாக்ஸ் வழங்கும் விழா நடந்தது.மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார். இராமநாதபுரம், திருப்புல்லாணி வட்டார பள்ளி மாணவ, மாணவியர் 2 ,277 பேருக்கு அரசின் இலவச லேப் டாப்கள், 136 உயர்நிலை, மேல்நிலைபள்ளி களுக்கு உயர் பரிணாம செட் டாப் பாக்ஸ்களை தமிழக தகவல் தொழில் நுட்பவியல் அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்.

அவர் பேசியதாவது: நடப்பு கல்வி ஆண்டு 15.5 லட்சம் லேப் டாப் வாங்கப்பட்டுள்ளது. 2017-18 கல்வி ஆண்டில் நீட் தேர்வு சென்ற 64 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் +2 , +1 பயிலும் மாணவ, மாணவியர்கள், +2 , +1 முடித்தவர்கள், கல்லூரி முதலாம், இரண்டாம் மாணவ, மாணவியர் என முன்னுரிமை அடிப்படையில் இலவச லேப் டாப் கட்டாயம் வழங்கப்படும்.

2020-21 கல்வி ஆண்டில் பிளஸ் 1 வகுப்பு படிக்கும் போதே மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச சைக்கிள், லேப் டாப் வழங்கப்படும். குடிநீர் பிரச்னையை அரசு ஒரளவுக்கு சரி செய்து வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் 45 குடியிருப்புகளுக்கு ரூ.60 லட்சம் மதிப்பில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் குடிநீர் கிடைக்கவில்லை என கோரிக்கை எழும் பகுதி மக்களுக்கு 2 மணி நேரத்தில் குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது .

மாவட்டத்தில் உள்ள ஊரணிகள், கண்மாய்கள் குடி மராத்து பணி கடந்த ஆண்டு ரூ.80 கோடி, நடப்பாண்டு ரூ.39 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட கல்வி அலுவலர் பிரேம்,, சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ஸ்டீபன்சன், தலைமை ஆசிரியர் பால் மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply