திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனிக்கு உடல்நலக் குறைவு..தனியார் மருத்துவமனையில் அனுமதி..

திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி உடல்நலக் குறைவால் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி. திண்டுக்கல் ஐ. லியோனி ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவை பட்டிமன்ற நடுவர். இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கிறித்துவ மதத்தை பின்பற்றுபவர். இவர் கங்கா கௌரி என்ற திரைப்படமொன்றில் நடித்துள்ளார். இவருக்கு 2010-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

 

இவர் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். 2011-ம் ஆண்டு திமுகவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும், 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் திமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தவர் இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Leave a Reply