கோவையில் கும்பாபிஷேக விழா!ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கோவையில் காஞ்சி காமகோடி , 68வது பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி மங்க ஸ்வாமிகள் மகா பெரி யவர்மணி மண்டபம் மற்றும் சாமவேத பாடசாலை கட்டப்பட்டு, நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் மகா பெரியவரின் பஞ்சலோக விக்ரஹத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.கோவை பேரூர் சொர்க்கவாசல் வீதியில் உள்ள சாமவேத பாராயண மடத்தில் , காஞ்சி மகா பெரியவர் விக்ரஹம் பிரதிஷ்டை மற்றும் கும்பா பிஷேக விழா கடந்த 23 ந்தேதி துவங்கியது.

 

சாமவேத பாராயணம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள் ராம் மற்றும் லட்சுமணன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில் முன்னதாக சாம வேத பாராயண மடத்தில் , காஞ்சி காமகோடி , 68வது பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி மங்க ஸ்வாமிகள் மகா பெரி யவர்மணி மண்டபம் மற்றும் சாமவேத பாடசாலை கட்டப்பட்டு,மகா பெரியவரின் பஞ்சலோக விக்ரஹம்,ஆதிசங்கரர், வேத வியாசர், மற்றும் ஜெயேந்திரர் விக்ரஹங்கள் நிறுவப்பட்டது.

பின்னர் மகா பெரியவரின் விக்ரஹம் சென்னை , மதுரை , திருச்சி , திரு வண்ணாமலை , ஆத் துார் , சேலம் , ஈரோடு , பாலக்காடு , பெங்களூரு மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு , பூஜை , ஆராதனை முடிந்து , கோவைக்கு கொண்டு வரப்பட்டு,கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. காஞ்சிபுரம் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் இதில் முன்னதாக யாக சாலை அமைக்கப்பட்டு மகா கணபதி ஹோமம் நடைபெற்றது.

பின்னர் நான்கு மற்றும் ஐந்தாம் கால பூஜைகள் நடைபெற்றது. மேலும், மகா சங்கல்பமும், மகா பூர்ணாஹூதியும் நடைபெற்று, மேள தாளம் முழங்க புனிதநீர் கலசங்கள் யாக சாலையிலிருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு,மகா பெரியவாவின் விக்ரகத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இந்த விழாவில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Leave a Reply