உலகக்கோப்பை கிரிக்கெட் நாளைய போட்டியில் இந்தியா,வெஸ்ட் இண்டீஸ் மோதல்

உலக கோப்பை தொடரில் நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் மோத உள்ளன. மேன்செஸ்டர் நகரில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு 5 போட்டிகள் முடிந்து இருக்கும் நிலையில் 4 போட்டிகளில் வென்றுள்ளது. இரு அணிகளுக்கும் தலா ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டு உள்ளது. சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 126 முறை நேருக்கு நேராக சந்தித்து உள்ளன.இதில் இந்திய அணி 59 போட்டிகளிலும் மேற்கு இந்திய தீவுகள் அணி 62 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.


Leave a Reply