எந்த அடிப்படையில் வருடத்திற்கு 3 முறை சாலைகள் போடப்படுகின்றன

சென்னையில் எந்த அடிப்படையில் வருடத்திற்கு 3 முறை சாலைகள் புதிதாக போடப்படுகிறது என நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெருங்களத்தூரை சேர்ந்த முரளி என்பவர் தாக்கல் செய்த மனுவில் தாங்கள் பகுதிகளில் விதிகளின் படி சாலை அமைக்காததால் வீடுகளை விட சாலை உயரமாகிவிட்டது எனவும், மழைக்காலங்களில் மழை நீர் மற்றும் கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

 

அதானால் சாலை பணிகளை மேற்கொள்ளும் முன் விதிமுறைகளின் படி சாலையை தோண்டி மீண்டும் புதிய சாலையை அமைக்க உத்தரவு இட வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை உள்ள பகுதியில் சாலைகள் மற்றும் நடைபாதைகள் வருடத்திற்கு 4 முறை மீண்டும் மீண்டும் போடப்படுவதாக தெரிவித்தது.

 

மாநில நெடுஞ்சாலை 6 மாதத்திற்கு மட்டுமே வரும் என அதிகாரிகள் தெரிவிப்பது மாநில நெடுஞ்சாலைகள் தரமற்றதாக இருப்பதை குறிப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். காண்ட்ராக்டர்களிடையே லஞ்சம் காரணமாக தரமற்ற சாலை அமைவதாகவும், நீதிமன்றம் தனி அதிகாரியை நியமித்து சாலை பணிக்கான செலவு, தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர். பின்னர் எதன் அடிப்படையில் வருடத்திற்கு 3 முறை சாலைகள் போடப்படுகிறது என சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை வியாழக்கிழமை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.


Leave a Reply