15,53,359 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க அரசாணை

15,53,359 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகள் ஏற்பட்ட தாமதத்தை தொடர்ந்து இந்த முறை 15,53,359 மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. 2017 – 2018,2018 – 2019, 2019 -2020 ஆம் கல்வி ஆண்டுகளில் படித்த மற்றும் படித்து கொண்டிருக்கின்ற மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

 

2019 – 2020 ஆம் கல்வி ஆண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும். 2017 – 2018, 2018 – 2019 ஆம் கல்வி ஆண்டுகளில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்பட உள்ளன.


Leave a Reply