மதம் மாறிய குடும்பத்தினரை ஊரை விட்டு வெளியேற மிரட்டல்

நாகை அருகே மதம் மாறிய குடும்பத்தினரை ஊரை விட்டு வெளியேற வற்புறுத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இரண்டு மகன்களுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் கோதண்ட ராஜபுரத்தை சேர்ந்த தென்கோவன், வசந்தி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வசந்தி குடும்பத்தார் மதம் மாறியுள்ளனர்.

 

இந்த நிலையில் கோவன் வெளியூர் சென்றிருந்த நிலையில் வசந்தியின் வீட்டிற்கு சென்ற சிலர் ஊரை காலி செய்யுமாறு மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் மகன்களுடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்த வசந்தி உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்ட வசந்தி தற்கொலைக்கு முயன்றார். இதை கண்ட போலீசார் 3 பேரையும் தடுத்து நிறுத்தி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.


Leave a Reply