10 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் அய்யா வைகுண்டர் உருவப்படம் தவறாக உள்ளது

தமிழக அரசின் 10 ஆம் வகுப்பு 11 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் அய்யா வைகுண்டர் பைபிள் படித்து கிறிஸ்துவ மதத்தை ஏற்று கொண்டதாக பதிவாகி இருப்பதற்கு அய்யா வழி பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதே போன்று ஏதோ உருவத்தை படமாக வரைந்து இவர் தான் வைகுண்டர் என்று அடையாளம் காட்டி இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக சுற்றறிக்கை மூலம் இந்த பாடத்திட்டத்தின் கருத்துகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 30 ஆம் தேதி சென்னையில் மாபெரும் அறப்போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் , அதே போன்று திருநெல்வேலியிலும் , கன்னியாகுமரியிலும் அய்யா வழி பக்தர்கள் சார்பாக மிக பெரிய கண்டன ஆர்பாட்டம் நடத்த இருப்பதாவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

அவர்கள் மனம் வேதனை படும் விதமாக , நடப்பு கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்திலும், 11 ஆம் வகுப்பு வரலாறு புத்தகத்திலும் அவரை ஒரு புரட்சியாளர் என்றும் போராளி என்றும், மிகவும் கீழ்த்தனமான முறையிலே விவிலியத்தை படித்து கற்று அதனை ஏற்று கொண்டு பிறகு ஞானம் அடைந்தார் என்கிற நிலையில் ஒரு தெய்வ நம்பிக்கையும் ஒட்டு மொத்த அய்யா வழி மக்களுடைய எண்ணங்களையும் வேதனைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை பாடத்திட்டத்திலே பாடத்தை பதிவு ஏற்றி இருக்கிறது. நீக்க வேண்டும் என்ற உயர்ந்த கோரிக்கையோடு அறப்போராட்டத்தை தொடங்கி இருப்பதாகவும் கூறினார்.


Leave a Reply