ஊழல் குற்றச்சாட்டில் இந்திரா காந்தியை துணிச்சலாக கைது செய்த நிஜ நாயகன் வி.ஆர். லக்ஷ்மி நாராயணன் காலமானார்

ஓய்வு பெற்ற தமிழக சட்ட ஒழுங்கு டி‌ஜி‌பி வி.ஆர். லக்ஷ்மி நாராயணன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. வி.ஆர்.எல். இந்த பெயர் தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும்பிரபலமானது.சி‌பி‌ஐ இல் சிறப்பாக செயல்பட்ட அதிகாரி. தமிழக சட்டம் ஒழுங்கு டி‌ஜி‌பி ஆக திறம்பட பணியாற்றியவர்.உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. ஆர். கிரிஷ்ணராயின் சகோதரர் என்று பலவாறு அறியப்பட்டவர், வி.ஆர். லக்ஷ்மி நாராயணன் கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட வி.ஆர். லக்ஷ்மி நாராயணன் சென்னை கிறித்தவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்.

 

பின்னர் சட்ட படிப்பை முடித்த இவர் குடிமை பணி தேர்வில் வென்று 1951 ஆம் ஆண்டு ஐபிு‌எஸ் அதிகாரியானார். மதுரை மாவட்ட கூடுதல் எஸ்‌பி யாக பணியை தொடர்ந்த இவர் நாளடைவில் சி‌பி‌ஐ க்கு மாற்றப்பட்டார். டெல்லியில் சிறப்பாக பணியாற்றிய இவர் சி‌பி‌ஐ இல் இணை இயக்குனர், கூடுதல் இயக்குனர் என படிபடியாக உயர்ந்தார். 1977 ஆம் ஆண்டு அவசர நிலைக்கு பின் ஊழல் குற்றச்சாட்டில் இந்திரா காந்தியை கைது செய்தவர் வி.ஆர். லக்ஷ்மி நாராயணன்.

 

துணிச்சலாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வீட்டிற்கே சென்று அவரை கைது செய்தார். 1980 ஆம் ஆண்டு மீண்டும் பிரதமர் ஆன பின் எந்த லக்ஷ்மி நாராயணன் தன்னை கைது செய்தாரோ அவரையே சி‌பி‌ஐ யின் இயக்குனர் ஆக்க முன் வந்தார், இந்திரா காந்தி. அவரின் நேர்மைக்கும், சிறப்பான செயல்பாட்டுக்கும், இதுவே சிறந்த உதாரணம். சி‌பி‌ஐ அதிகாரியாக டெல்லியை கலக்கி கொண்டிருந்த வி.ஆர். லக்ஷ்மி நாராயணன் தமிழ்நாட்டிற்கு தேவை என அவரை கேட்டு பெற்றார், அப்போதைய முதலமைச்சர் எம்‌ஜி‌ஆர். எம்‌ஜி‌ஆர் இன் கோரிக்கையை ஏற்று தமிழக பணிக்கு அனுப்பி வைத்தார்.

 

சட்டம் ஒழுங்கு டிடி‌ஜி‌பி ஆக பணியாற்றிய வி.ஆர். லக்ஷ்மி நாராயணன் தமிழக காவல் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். சட்டம் ஒழுங்கு டி‌ஜி‌பி ஆகவே ஓய்வு பெற்ற இவர் அதன் பின், நெஞ்சில் உரம்,நேர்மை திறம் எனும் நூல்களை எழுதினார். சென்னை அண்ணாநகரில் வசித்து வந்த வி.ஆர். லக்ஷ்மி நாராயணன் உடல் நலக்குறைவால் தனது 91 வது வயதில் காலமானார். அவரது உடலுக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.


Leave a Reply