தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாக திமுக. எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.ஆனால் தமிழகத்தில் சென்னை தவிர வேறு எங்கும் தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்று மறுத்துள்ளார், அதிமுக எம்எல்ஏ. ராஜன் செல்லப்பா. தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் காலி கூடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல இடங்களில் குடிநீருக்காக மோதல்களும் ஏற்பட்டு வருகின்றனர். திருவாண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தண்ணீர் பிடித்து கொண்டிருக்கும் போது, யார் முதலில் பிடிப்பது என்பது தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. தண்ணீர் பிரச்சனையை தீர்க்க கோரி தூத்துக்குடி மாவட்டத்தில் திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக சார்பில் குடிநீர் விநியோகம் செய்வதை திமுக எம்பி கனிமொழி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். கடலூரில், திருமாவளவன் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும் எனவும் கூறினார்.
அதே நேரத்தில் தமிழகம் முழுவதும், தண்ணீர் பஞ்சம் என்பதை மறுத்துள்ளார். மதுரை வடக்கு தொகுதியில் அதிமுக எம்எல்ஏ. ராஜன் செல்லப்பபா மழை வேண்டி பரிகார பூஜை நடத்தப்பட்டதன் அடிப்படையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து இருப்பது மிக மகிழ்ச்சி அளிப்பதாகா கூறியுள்ளார். எதிர் கட்சிகளின் குற்றக்சாட்டு ஒரு புறம், பற்றாக்குறை இல்லை என மறுக்கும் அரசு ஒரு புறம் என அரசியலாகி நிற்கிறது குடிநீர் பிரச்சனை. இதனை தாண்டி மக்களின் தாகம் தீர்க்க தடையின்றி குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.