விராட் கோலிக்கு அபராதம் விதித்தது ஐ‌சி‌சி- காரணம் இது தான்…

இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி சௌத்கேம்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி , ஆப்கானிஸ்தானின் அதிரடி பந்து வீச்சால் 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது.

 

அப்போது ஆட்டத்தின் 29 வது ஓவரை பும்ரா வீசினார். இதை ஆப்கானிஸ்தான் பேட்மென் ரகமத்ஷா எதிர் கொண்டார். அந்த ஓவரின் நான்காவது பந்து ரகம்த்ஷா வின் பேடில் பட்டது. உடனே வீரர்கள் இதற்கு எல்‌பி‌டபில்யு கேட்டு நடுவரிடம் முறையிட்டனர். ஆனால் அவர் விக்கெட் கொடுக்கவில்லை. இதனால் கேப்டன் விராட் கோலி நடுவரிடம் ஆவேசமாக சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

 

இதனை தொடர்ந்து இந்த விவாகாரம் குறித்து நடுவர்கள் ஐசி்‌சி யிடம் புகார் அளித்துள்ளனர். இதற்கு அடுத்த படியாக ஐசிவ‌சி நடுவர் ஒருவர் நடத்திய விசாரணையில் கோலி தன் தவறை ஒப்பு கொண்டதோடு தண்டனையை ஏற்பதாகவும் ஒத்து கொண்டுள்ளார். இதன் படி விராட் கோலிக்கு போட்டிக்கான சம்பளத்திலிருந்து 25 சதவீதம் அபராதமும், ஒரு எச்சரிக்கை புள்ளியும் வழங்கப்பட்டது.

 

ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா உடனான டெஸ்ட் போட்டியில் தவறான முறையில் நடந்து கொண்டதற்காக ஒரு எச்சரிக்கை புள்ளி விராட் கோலிக்கு வழங்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் விராட் கோலிக்கு இது இரண்டாவது எச்சரிக்கை புள்ளியாகும். ஒரு வீரர் இரண்டு வருடங்களில் 4 எச்சரிக்கை புள்ளிகளுக்கு மேல் எடுத்தால் அவரை சஸ்பெண்ட் செய்யவோ அல்லது தடை செய்யவோ ஐசிவ‌சிக்கு அதிகாரம் உண்டு.

 

அதன்படி இரு எச்சரிக்கை புள்ளிகளை விராட் கோலி பெற்று இருப்பதால், ஒரு டெஸ்ட் போட்டி,2 ஒரு நாள் போட்டிகள், டி20 போட்டிகளில் விளையாட கோலிக்கு தடை விதிக்க முடியும். எனவே ஒரு நாள் போட்டிகளில் விராட் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. ஆனால் ஐசி்‌சி தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்க படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply