குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கூடுதலாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து முதலைமைச்சர் உத்தரவு

Publish by: --- Photo :


சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் எங்கும் தண்ணீர் தட்டுபாடு இல்லாத அளவிற்கு குடிநீர் விநியோகம் செய்யபட்டு வருவதாக குறிப்பிட்டு உள்ளார். வீதி எங்கும் காலி குடங்களுடன் அலையும் மக்கள் கூட்டம் தண்ணீர் கொடுங்கள் என போராட்டம் என தமிழகத்தின் பல பகுதிகள் வாடி வருகின்றனர். தலைநகர் சென்னையும் தண்ணீர் தட்டுபாடல் தடுமாறி கொண்டு இருக்கிறது.

 

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் எழுந்து கொண்டு இருக்கின்றன.இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் , சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம்,செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்டு விட்டதை சுட்டிக்காட்டினார். சென்னையை சுற்றியுள்ள ஏரி, குளங்கள் மற்றும் குவாரிகளிலிருந்து நீர் பெற்றும்,டேங்கர் லாரிகள் மூலமும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார்.

 

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 200 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், பழனிசாமி தெரிவித்துள்ளார். ஜோலார் பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்திற்காக 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு உள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி கிரிஷ்ணா நதியில் இருந்து தமிழகத்திற்கு 12 டி‌எம்‌சி தண்ணீருக்கு பதிலாக 2 டி‌எம்‌சி ஆக கிடைத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

நாள் தோறும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவதாகவும்,கேரள முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாவும் கூறினார் எடப்பாடி பழனிசாமி. ஆன்லைன் மூலம் ஒரே அடுக்கு மாடியைசேர்ந்தவர்கள் 10 டேங்கர் லாரிகளை முன்பதிவு செய்தால் எவ்வாறு தண்ணீரை வழங்க முடியும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அமைச்சர்களின் வீடுகளுக்கு லாரியில் தண்ணீர் விநியோகம் செய்யபடுவது குறித்து, நாள் தோறும் தான் 2 வாலி தண்ணீரை மட்டுமே பயன்படுத்துவதாக விளக்கமளித்தார். தண்ணீர் பிரச்சனையை அரசியல் ஆக்க வேண்டாம் என்று கேட்டு கொண்ட எடப்பாடி பழனிசாமி,கேள்விக்கு புள்ளி விவரங்களுடன் பதில் அளித்தார்.