விஜய்யின் இரு வேடங்களில் கலக்கும் பிகில் போஸ்டர்

தெறி, மெர்சல் ஆகிய இரு படங்களை தொடர்ந்து விஜயை வைத்து மீண்டும் இயக்குனர் அட்லீ இயக்கும் புதிய படத்தை தளபதி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தளபதி 63 என்று அழைத்து வந்தனர். இதனை தொடர்ந்து தளபதி 63 யின் அப்டேட்டுகள், படப்பிடிப்பு சம்பந்தமான காட்சிகள், விஜயின் வைரல் வீடியோக்கள் என அனைத்தும் ஹேஷ் டேக் தளபதி 63 என்ற பெயரின் கீழ் வெளியாகி வந்தன.

 

இந்த படம் பற்றி ஏதாவது அப்டேட் கொடுங்க என தயாரிப்பு நிறுவனத்தை தளபதி ரசிகர்கள் நச்சரித்த நிலையில்,கடந்த புதன் கிழமை தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தளபதி 63 இன் ஃபர்ஸ்ட் லுக் வரும் 21 ஆம் தேதி மாலை 6 மணிக்கு என்றும்,படத்தின் செகண்ட் லுக் அடுத்த நாள், அதாவது விஜயின் பிறந்த நாளான இன்று 22 ஆம் தேதி 12 மணிக்கு வெளியிடப்படும் எனவும் அறிவித்து இருந்தனர்.

 

அதன் பின் அஜீத்,விஜய் ரசிகர்களிடையே நடந்த மோதலும், சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாக இருந்ததால், நேற்று காலை முதலே விஜய் ரசிகர்கள் ட்விட்டர் முழுவதும் ஆக்கிரமித்து இருந்தனர். இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், அஜித் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்.

 

தற்போது அந்த போஸ்டரும் வெளியாகி விட்டது. சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே ரசிகர்களால் பேசப்பட்ட பிகில் படத்தின் தலைப்பாக அமைந்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த உடனே விஜய் இரு வேடங்களில் நடிக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. அதில் ஒரு விஜய் அண்ணனாகவோ அல்லது அப்பாவாகவோ இருப்பார் என எதிர்பார்க்கலாம். போஸ்டரில் ஒரு விஜய் மீன் மார்க்கெட்டில் இருப்பது போன்றும், பின்னால் மற்றொரு விஜய் நிற்பது போன்றும் போஸ்டர் அமைந்துள்ளது.

 

ஒரு விஜய் காக்கி வெட்டி அணிந்து கையில் மாலையுடனும், கழுத்தில் வெள்ளி சைனுடனும் முரைப்பாக நாற்காலியில் அமர்ந்துள்ளார். அவர் முன்னாள் உள்ள கட்டையில் கத்தி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த விஜயின் லுக் மெர்சல் படத்தின் வெற்றி மாறனை நினைவூட்டுகிறது. எனவே,இந்த கதாபாத்திரம் திரையில் வரும் நேரமெல்லாம் கூஸ்பம்ஸ்‌புக்கு பஞ்சமில்லை என எதிர்பார்க்கலாம். அவரது பின்னால் உள்ள விஜய் கால் பந்தை கையில் வைத்து இருப்பது போன்று போஸ்டர் அமைந்துள்ளது.

 

இதன் கதை களத்தை யூகிக்கும் போது ஒரு விஜய் மீன் வியாபாரியாகவும், அதே நேரத்தில் மிகப் பெரிய ரௌடியாகவும் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் முழுவதும் வட சென்னையை சுற்றிய நகரும் காரணத்தால் விஜயின் அசால்ட்,லோக்கல் அடைமொழி கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தும். மெர்சல் படத்தின் தலைப்பு காளையை முன் மாதிரியாக கொண்டு தலைப்பு அமைக்கப்பட்டுஇருந்தது. பிகில் படத்தின் தலைப்பு மீனை முன் மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பில் ‘ல்’ எழுத்து மீன் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் தோரணையான விஜய் அசால்ட்டான விஜய் என இரு வேடங்களில் பிகில் கலக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.


Leave a Reply