பந்துக்கே பயம் காட்டும் பண்ட்

பயமின்றி பந்துகளை சிக்ஸ்சர்களுக்கு விளாசி பந்து வீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்குபவர் தான் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்.ஐபிச‌எல் போட்டிகளில் தனக்கே உரித்தான அதிரடி ஆட்டத்தின் மூலம் உலக அரங்கில் வெளிச்சம் பெற்ற கடந்த ஆண்டு அவர் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஆடிய ருத்ர தாண்டவ ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் எவரும் எளிதில் மறக்க மாட்டார்கள்.

 

உள்ளூர் மற்றும் ஐபிர‌எல் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால்,இந்திய அணிக்கு சேர்க்கப்பட்டார் பந்த். பலமான அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சதமடித்து சர்வதேச கிரிக்கெட் உலகை தன்னை நோக்கி திரும்பச்செய்தார். குறிப்பாக கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை அடித்து அமர்க்களப்படுத்தினார்.

 

அன்று முதல் இன்று வரை இந்திய டெஸ்ட் அணிக்கு முதன்மை விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது பந்திற்கு ஏமாற்றமே கிடைத்தது. தினேஷ் கார்த்திக்,விஜய் சங்கர் ஆகியோர் அணியில் சேர்க்கபட, இவரின் பெயர் ரிசர்வ் வீரராகவே சேர்க்கப்பட்டது.


Leave a Reply