தங்கம் வென்ற கோமதிக்கு பைக் வழங்கிய வணிகர் சங்க பேரமைப்பு

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த கோமதி மாரிமுத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. திருச்சியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய கோமதி ஊக்க மருந்து உட்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதாக கூறிய அவர்,ஊக்க மருந்து பரிசோதனைக்காக நாளை டெல்லி சென்று ரத்த மாதிரிகளை வழங்கப்போவதாகவும், கோமதி கூறினார்.

 

மேலும் ஊக்க மருந்து அருந்தி விளையாட்டில் வெற்றி பெற வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் கூறினார். ஊக்க மருந்து தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்த பின் செப்டம்பரில் நடக்கும் உலக தடகள போட்டியில் பங்கேற்று சாதிக்க போவதாகவும் கோமதி நம்பிக்கை தெரிவித்தார்.


Leave a Reply