சென்னையில் பெண் அதிகாரி போல் நடித்து ரூ. 50,000 கொள்ளை

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ,பிழை திருத்தும் அதிகாரி போல் வீட்டுக்குள் புகுந்து 50,000ரூபாயை இளம் பெண் ஒருவர் கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காமராஜர் சாலையை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் வீட்டிற்கு சென்ற பெண் ஒருவர் தாம் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் அதிகாரியாக உள்ளதாகவும், ஸ்மார்ட் அட்டை மற்றும் ஆதார் அட்டையில் பெயர் முகவரி திருத்தம் செய்ய வந்துள்ளதாகவும், கூறியதாக தெரிகிறது.

 

இதனை நம்பிய பெண்ணை வீட்டுக்குள் அனுமதித்துள்ள ராஜேஸ்வரி தமது ஆடையை சரி செய்வதாக கூறி விட்டு அறை ஒன்றில் புகுந்துள்ள பெண் அங்கு மேசை மீது இருந்த பர்சில் இருந்த 50,000 ரூபாய் பணத்தை நைசாக திருடி கொண்டு சென்றதாக கூறினார். இது குறித்து ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் அப்பகுதியில் உள்ள சி‌சி‌டி‌வி பதிவுகள் உதவியுடன் அப்பெண்ணை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.


Leave a Reply