ஆத்தூரில் கடத்தப்பட்ட தொழிலதிபர் சேலம் போலீசில் தஞ்சம்

சேலம் மாவட்டம் ஆக்தூரில் கடத்தப்பட்டதாக கூறிய தொழிலதிபர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். பெட்ரோல் பங்க் உரிமையாளரான சுரேஷ் என்ற நபரை திங்கள் கிழமை மாலை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்று விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் புதன் கிழமை இரவு 9 மணியளவில் தொழிலதிபர் சுரேஷ் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

 

தன்னை 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று காரில் ஒரு பகுதியில் அடைத்து வைத்ததாகவும், போலீசார் தேடுவதை அடுத்து அல்லிக்குப்பம் என்ற இடத்தில் இறக்கிவிட்டு சென்றதாகவும் கூறினார். தகவல் அறிந்து வந்த தனிப்படை போலீசார் சுரேஷை ஆத்தூருக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply