முறையான அனுமதியும், பாதுகாப்பும் வழங்க கோரி தனியார் தண்ணீர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.தண்ணீர் எடுக்க செல்லும் இடங்களில் லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் தாக்குதலுக்கு ஆளாவதாக, அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் கூறியுள்ளார். போலீசாரும் லாரியை தடுத்து நிறுத்தி இடையூறு தருவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
தண்ணீரை கனிம வளத்துறை பட்டியலில் இருந்து நீக்கி, பொதுபிரிவில் சேர்க்க வேண்டும் என்று பலமுறை முறையிட்டும், அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியிருக்கிறார். சென்னையில் நாளை நடைபெறும் அவசர ஆலோசனை கூட்டத்தில் வேலை நிறுத்தம் செய்வது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
தவெகவில் கண்ணீர் மல்க இணைந்த ஸ்னோலின் தாயார்!
திருச்சியில் பயங்கரம்..குடிபோதையில் இளைஞர் அடித்துக் கொலை..!
தகனம் செய்யப்பட்டது டெல்லி கணேஷ் உடல்..!
பிரஜ்வல் ரேவண்ணா ஜாமின் ரத்து..!
சேற்றை கழுவ சென்ற மாணவன்..கால் வழுக்கி குளத்தில் விழுந்து உயிரிழப்பு..!
விவசாயி மீது துப்பாக்கி சூடு..மணிப்பூரில் பதற்றம்..!