ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவன் போலீசில் சரண் அடைந்தான். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் உசைன் இவரது மனைவி அமாஜி யின் நடத்தை குறித்து உசேனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் இருந்துள்ளது. இந்நிலையில் கதிராய செரிவு அருகே சென்று கொண்டிருந்த அமாஜியின் கழுத்தை உசைன் அறுத்துள்ளார்.
பின்னர் துண்டித்த தலையை கையில் எடுத்துக் கொண்டு நேரடியாக கள்ளகடா காவல் நிலையத்திற்கு சென்ற உசைன் அங்கு நடந்த விபரங்களை கூறி சரணடைந்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக’ வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.