தனியார் நிறுவனத்தில் 5 கோடி ரூபாய்க்கும் மேல் கையாடல்: சகோதரர்கள் உட்பட 3 போ் கைது

கோவை சத்தி சாலை கணபதியில் வசித்து வருபவர் சிவக்குமார்.இவர் தனது வீட்டின் அருகிலேயே BEUTY WARES என்ற டைல்ஸ் மற்றும் கட்டிடம் சம்பந்தமான பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.இந்த நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் டைரக்டராக சிதம்பரம் என்பவரும்,விஜயராகவன் என்பவரின் மகன்கள் முரளி மற்றும் செல்வக்குமார்,நாகராஜ் உள்ளிட்ட நால்வர் கணக்கு வழக்குகளை பார்த்து வந்துள்ளனர்.

 

இந்த நிலையில் இவர்கள் நால்வரும் கடந்த ஜூலை 2015 ஆம் ஆண்டு முதல் கணிணி ரசீதுகளை நிறுவனத்தில் உள்ள கணக்கில் மோசடியாக திருத்தி நம்பிக்கை மோசடி செய்து 5 கோடி ரூபாய்க்கும் மேல் கையாடல் செய்து மோசடி செய்து விட்டதாகவும்,அவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு மோசடி செய்த தொகையினை பெற்றுத்தரும்படி நிறுவனத்தின் உரிமையாளர் சிவக்குமார் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

விசாரணையில் நிறுவனத்தில் 5 கோடி ரூபாய்க்கும் மேல் கையாடல் செய்து மோசடி நடந்துள்ளது தெரிய வந்தது. அதன்படி கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவின் படி சிதம்பரம் மற்றும் சகோதரர்களான முரளி மற்றும் செல்வக்குமார் உள்ளிட்டோரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

கையாடல் புகாரில் சகோதரர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Leave a Reply