டிக் டாக் வீடியோ பதிவிடும் போது விபரீதத்தில் முடிந்த இளைஞரின் விளையாட்டு

கர்நாடக மாநிலத்தின் ஒரு நகரில் டிக் டாக் செயலியில் வீடியோ பதிவு செய்வதற்காக சாகசம் செய்த இளைஞரின் முதுகெலும்பு உடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமார் என்பவர் டிக் டாக் செயலியில் பாடல்கள் பாடியும்,நடனம் ஆடியும் வீடியோ பதிவிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சாகசம் செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளிவிட விரும்பிய அவர் தனது நண்பரின் உதவியுடன் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். கைகள் தரையில் படாமல் குட்டி கரணம் அடிக்கும் முயற்சியில் போதிய பயிற்சி இல்லாததால் அவர் விபத்தில் சிக்கினார்.


Leave a Reply