இறால் வரத்து அதிகரிப்பால் இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் உற்சாகம் !!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடற்கரையோரப் பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் இருந்ததை அடுத்து, துறைமுகம் மற்றும் கடலோர பகுதிகளில் விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தமிழக கடலோரப் பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 ஆம் தேதி வரையிலான 60 நாள்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாகக் கருதப்படுகிறது.

 

இந்த காலகட்டத்தில், கருவுற்ற மீன்கள் மற்றும் மீன் குஞ்சுகள் வலைகளில் சிக்கிக்கொண்டு இனப்பெருக்கம் பாதிக்கப்படும் என்பதால், விசைப் படகுகள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிப்பதற்கு தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டிருந்ததுஇந்த தடை உத்தரவானது, (ஏப்.14) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனையடுத்து, சென்னை, கடலூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியகுமாரி உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் விசைப் படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

 

இந்த கால கட்டத்தை, மீனவர்கள் தங்களது விசைப் படகுகள் மற்றும் வலைகளை சீரமைக்கும் பணிகளுக்காக பயன்படுத்திக் கொண்டனர். தடை காலம் தொடங்கியுள்ளதை அடுத்து, இராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதி துறைமுகங்களில் 1,600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில் மீன்பிடி தடைகாலம் நீங்கி மீண்டும் கடலுக்குள் உற்சாகத்துடன் சென்றனர். இன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு எப்போதையும் விட அதிகளவில் இறால் கிடைத்தது பெரும் சந்தோஷமாக உள்ளது என்று மீனவர்கள் கூறுகின்றனர்.


Leave a Reply