தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இன்று 15.06.19 திருப்பூர் ரயில் நிலையத்தில் டிஸ்சோ பள்ளி மாணவர்களும் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து ரயில் நிலைய முன்புறம் தூய்மை பணியினை மேற்கொண்டனர். மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தூய்மையை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்ற உரையை உதவி ரயில்வே மேலாளர் அண்ணாதுரை வழங்கினார்.
முன்னதாக நிலைய மேலாளர் பெரியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன், வணிக பிரிவு ஆய்வாளர் இளங்கோ, இயற்கை ஆடையகம் மணிகண்டன், விதைகள் மக்கள் நல அமைப்பு, சிக்கண்ணா கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் கோவிந்தப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பிறகு நடைபாதையில் தூய்மையை வலியுறுத்தி பேரணி சென்றனர், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து துணி பையை பயன்படுத்த வேண்டும் என்று கோஷமிட்டனர், பயணிகளுக்கு துணி பைகளையும் வழங்கினர். ரயில் நிலைய துணை மேலாளர் முத்துக்குமார் நன்றியுரை கூறினார். இறுதியாக மாணவர்கள், பயணிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவரும் இணைந்து வலிமையான பாரத்தை உருவாக்குவோம், தூய்மையை கடைபிடிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.