சீனாவில் கனமழையில் சிக்கி 61 பேர் பலி

Publish by: --- Photo :


சீனாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர். தெற்கு மற்றும் வடக்கு சீன பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக சூறைகாற்றுடன் கனமழை பெய்து வருகிறது. திரும்பும் திசை எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் தொடர்புகள் அற்று தனித்து விடப்பட்டுள்ளனர்.

 

மேலும் சுமார் 37 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 61 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் மூன்றரை லட்சம் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply