உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உயர் மின்கோபுரத்தின் மீது ஏறி போராட்டம்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டாம்பாளையம் பகுதியில் உயர் மின் அழுத்த கேபிள்கள் அமைத்து மின் பாதை அமைப்பதற்காக உயரமான கோபுரங்கள் அமைக்க பவர் கிரிட் எனும் மத்திய அரசு நிறுவனம் திட்டமிட்டு மின் கோபுரம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த உயர் மின் பாதை தங்களது விவசாய நிலங்கள் வழியாக செல்வதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும்,விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் அபாயமுள்ளதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும்,உயர் மின் பாதையை கோபுரங்கள் அமைப்பு அமைத்து கொண்டு செல்வதைத் தவிர்த்து புதை வடத்தடத்தின் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் அரசு செவிமடுக்கவில்லை.

 

இந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் சூலூர் தாலுகா கருமத்தம்பட்டி செம்மாண்டம் பாளையம், எலச்சிபாளையம் போன்ற பகுதிகளில் பவர் கிரிட் நிறுவன அதிகாரிகள் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசாருடன் அதிரடியாக அத்துமீறி நுழைந்து நில அளவீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடனும், அதிகாரிகளுடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதைத் தொடர்ந்து பவர் கிரிட் நிறுவனத்தினர் நில அளவை தெடர்ந்து நடத்தினர்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் என 6 பேர் திடீரென உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி போரட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இதனால் டி.எஸ்.பி பாஸ்கரன் தலைமையிலான காவல் துறையினர் 100க்கும் மேற்பட்ட காவலர்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் மின் கோபுரத்தில் இருந்து இறங்க மறுத்துவிட்டனர்.தொடர்ந்து 6 மணி நேரமாக போராட்டக்கார ர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பாதுகாப்பிற்காக தீயணைப்புத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகின்றது.

 

இதே போல் கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில் அருகே உயர்மின் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுமார் 20 க்கும் மேற்பட்டோரை கைது செய்த காவல் துறையினர் அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.


Leave a Reply