ராஜராஜ சோழன் பற்றி தரக்குறைவாக பேசிய இயக்குனர் பா. ரஞ்சித்

மாமன்னர் ராஜராஜ சோழன் பற்றி தரக்குறைவாக பேசியதால் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் கலந்து கொண்டார்.

 

அப்போது ரஞ்சித் பட்டியலின சமுதாய மக்களின் நிலங்களை ராஜராஜ சோழ மன்னன் பறித்ததாக பேசியுள்ளார்.  மேலும் ராஜராஜ சோழனை பற்றி அவதூறாக பேசியுள்ளார். இதனையடுத்து பா. ரஞ்சித் மீது காவல் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து பா. ரஞ்சித் மீது காவல் துறையினர் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சாதி, இன, மொழி மூலம் கழகத்தை ஏற்படுத்தும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply