அ தி மு க- வினர் தே மு தி க-வை தேய் பிறையாக்க நினைக்கிறதா !!

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தலில் அ தி மு க கூட்டணி பரமக்குடி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது.ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவியது இருப்பினும் அ தி மு க கூட்டணி- யுடன் தே மு தி க கூட்டணி வைத்து களம் கண்டது ஆனால் தற்போது தே மு தி க நிர்வாகிகள் அ தி மு க பக்கம் செல்ல தொடங்கியுள்ளனர்.

 

கூடுவிட்டு கூடு பாய்தல் போல் உள்ளது.தே மு தி க- வின் நிர்வாகிகள் மனநிலை ஒரே கூட்டணியில் பயணிக்கும் நிர்வாகிகள் ஏன் தோழமை கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டும்.இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் வழி நடத்தும் வகைகள் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா இல்லை அ தி மு க- வினர் தே மு தி க- வை தேய்பிறையாக்க நினைக்கிறதா இந்நிலையில் தான் தற்போது இராமநாதபுரம்மாவட்டம், போகலூர் தேமுதிக ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஒன்றிய பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் தலைமையிலும்அ தி மு க மாவட்ட கழக செயலாளர் MA.முனியசாமி அவர்கள் முன்னிலையில் தே மு தி க- வில் இருந்து விலகி அஇஅதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.


Leave a Reply