இராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் பகுதியை சேர்ந்தவர் வினோத்-28 திருமணமாகி பெண் குழந்தை உள்ளது இந்நிலையில் இராமநாதபுரம் முதல் தேவிபட்டினம் செல்லும் சாலையில் இரட்டைகிளி ரைஸ் மில் பேருந்து நிலையம் அருகில் வினோத் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இரு சக்கர வாகனத்தின் டயர் வெடித்து நிலை தடுமாறி அருகில் இருந்த மரத்தில் மோதி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இவரை அரசு தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்தது.காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் தமிழர்கள் வீர விளையாட்டு கபடியின் சிறந்த வீரராக சிறந்து விளங்கினார் என்று சொல்லப்படுகிறது.