கடலூரில் அனுமதியில்லாமல் செயல்பட்டுவந்த குடிநீர் ஆலைக்கு சீல்!

Publish by: --- Photo :


கடலூர் அருகே உரிமத்தை புதுப்பிக்காமல் செயல்பட்ட குடிநீர் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த ஆண்டு பெய்யும் மழை முற்றிலும் பெய்யாத காரணத்தினால், வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.

 

நேற்று 104.36 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விடுகிறது. இதனால் பல இடங்களில் நீரை திருடி அதிக அளவு விற்பனை செய்யும் போக்கு தொடர் கதையாகியுள்ளது.இதனால் கடலூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கண்காணிக்க வேண்டும்.

 

நிலத்தடி நீரை திருடி விற்பதற்கு தடை விதிக்க வேண்டும். இதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்காணித்த நிலையில், இன்று கடலூர் அருகே அழகிரி என்பவர் கடந்த 2015 வரை அனுமதி பெற்று அதன் பிறகு அனுமதி பெறாமல் நீரை திருடி விற்று வந்தது தெரிந்தது. அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில் அவரின் மீது குற்றம் உறுதியாகியது.

 

எந்த விதமான ஐ‌எஸ்‌ஐ முத்திரையும் வாங்கவில்லை. அதுமட்டுமில்லாமல் உணவு பாதுகாப்பு துறையிடமும் எந்த அனுமதியும் பெறவில்லை. பொதுப்பணிதுறையிலும் எந்த அனுமதியும் பெறவில்லை. அதுமட்டுமில்லாமல், குளிர்பானங்களும் தயாரிக்கபட்டு கிராமப்புற பகுதியில் விற்று வந்தது தெரிய வந்தது. தற்போது ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


Leave a Reply