அ தி மு க அமைச்சர் செவி சாய்க்காததால் தி மு க-வின் எம் பி யிடம் முறையிட்ட ஊர் மக்கள்

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லானி ஒன்றியம் ரெகுநாதபுரத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் கிளை நூலகத்தின் நிலை தான் இது.நூலகர் ராஜேந்திரன் மாற்றுத்திறனாளியான இவர் பலமுறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் இம்மாவட்டத்தின் அமைச்சரும் மணிகண்டனை(தகவல் தொழில்நுட்ப துறை) சந்தித்து நூலகக் கட்டிடம் தொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்துள்ளார்.

 

ஆனால்இதுவரை இதுதொடர்பாக எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று கூறுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்புகூட மேற்கூரை சுவர் இடிந்துவிழுந்துள்ளது.நல்லவேளையாக எந்தவிதமான சேதமும் இல்லையாம்.நூலகம் செல்லவே மக்கள் அச்சப்படும் சூழலில் நூலகர் இன்னும் நம்பிக்கையோடு நூலகத்தை நடத்திக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் தான் இராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி இன்று ரெகுநாதபுரம் வருகை தந்தார். ஊர் பொதுமக்கள் சார்பாக புது நூலக கட்டிடம் கட்டித்தர கோரிக்கை வைத்தனர் அப்போது புதிய நூலகக் கட்டிடம் கட்டித் தரப்படும் என உறுதியளித்தார்.மாற்றுத்திறனாளியான நூலகர் ராஜேந்திரன் உடனிருந்தார்.


Leave a Reply