வெயிலின் காரணமாக தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

Publish by: --- Photo :


உத்திர பிரதேசத்தில் ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கடும் கடும் வெப்பத்தால் மரணம். வட மாநிலங்களை பொருத்தவரையில் வெயிலின் தாக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக டெல்லியில் மட்டும் 48 டிகிரி செல்சியஸ் இருந்தது. ரெட் அலர்ட் எச்சரிக்கையும் வட மாநிலங்களில் விடுக்கப்பட்டுள்ளது.

 

இறந்தவர்கள் கோவை பகுதியிலிருந்து சுற்றுலா சென்றவர்கள் என தெரிய வந்துள்ளது. ஆக்ராவில் இருந்து கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தவர்களுக்கு ஜான்சி அருகே உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

 

இறந்தவர்களின் விவரம்- பச்சையா (வயது 80)
பாலகிரிஷ்ணன் (வயது 67)
தனலக்ஷ்மி (வயது 74)
சுப்பாரய்யா (வயது 71)


Leave a Reply