அன்பில் தர்மலிங்கத்தின் சிலையை ஸ்டாலின் திறந்து வைத்தார்!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் நூறாவது பிறந்தநாளையொட்டி அவரது சிலையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அன்பில் தர்மலிங்கத்தின் ஏழரை அடி உயரமுள்ள வெண்கல சிலை திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, ஐ.பெரியசாமி, சேடப்பட்டி முத்தைய்யா, எம்.பி. திருச்சி சிவா, நடிகர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சிலை திறப்பு விழாவில் பேசிய ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது போலவே அன்பில் தர்மலிங்கத்தின் வழியில் செயல்பட்டு சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்றார்.


Leave a Reply