3,4,5,8 ஆகிய வகுப்புகளுக்கு ஜூன் 15 இல் புத்தகம் வழங்கப்படும்

3,4,5,8 ஆகிய  வகுப்புகளுக்கான பாடப்புத்தகம்  வரும்  15 ஆம்  தேதிக்கு  பிறகே  கிடைக்கும்  என   பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. 3,4,5,8 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்டம் அடுத்த ஆண்டு தான் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டின் இறுதியில் தமிழக அரசு தரப்பிடமிருந்து அரசாணை வெளியிடப்பட்டது.

 

அதன்படி இந்த ஆண்டிலேயே 3,4,5,8 ஆகிய வகுப்புகளுக்கானபாடத்திட்டம் புதிதாக இந்த ஆண்டே வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டிலிருந்தே அனைத்து வகுப்புகளுக்கான பாடத்திட்டமும் புதிதாக  மாற்றப்படுகின்றன என கூறினர். ஆனால் இறுதி நேரத்தில் தான் அரசாணை வெளியிடப்பட்டது என்பதால் புதிய பாடத்திட்டம் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அது முடிந்து மே மாதத்தில் தான் இறுதி வடிவம் என்பது தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு வழங்கபட்டிருக்கிறது. இதனால் அதை அச்சிடும் பணியில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

 

3 ஆம் தேதியே பள்ளி திறக்கப்பட்டிருக்கும் நிலையில் 4 வகுப்புகளுக்கான புத்தகங்கள் கிடைக்கவில்லை என பெற்றோர் தரப்பில் புகார் எழுப்பப்பட்டிருந்தது. 15 ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் அந்த புத்தகங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு  பாடநூல் கழகம் கூறியுள்ளது. 3 ஆம் வகுப்பு புத்தகங்களை பொருத்தவரையில் 45 சதவீதம் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது.

 

4 ஆம் வகுப்பு புத்தகங்கள்  அனைத்தும் ஓரளவு தயார் நிலையில் உள்ளன. 5 ஆம் வகுப்பை பொருத்தவரையில் 75 சதவீதம் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. 8 ஆம் வகுப்பு புத்தகங்கள் 100 சதவீதம் தயார் நிலையில் உள்ளதாகவும், வரும் 15 ஆம் தேதி மானவர்களுக்கு வழங்கப்படும் என்றும் பள்ளிகல்வித்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.


Leave a Reply