இலங்கையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடியை ஆந்திர ஆளுநர் நரசிம்மன், உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி , முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதனைதொடர்ந்து ரேணிகுண்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் இருந்து இரண்டாவது முறையாக வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி.
மத்தியில் வலுவான ஆட்சி அமைவதற்கு நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும் உதவ வேண்டும் என கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசுக்கு எல்லா உதவியும் செய்து தரப்படும். பாரதீய ஜனதா கட்சி ஆந்திராவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் தனது கொடியை ஏற்றும் என தெரிவித்தார்.