இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதல்- தந்தை கண்முன்னே மகள் பலியான சோகம்

சென்னை மூலக்கடையில் இரு சக்கர வாகனத்தில் தந்தை தவறான பாதையில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் 7 வயது சிறுமி உயிரிழந்தார். அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாண்ட்ரியன் இவரது 7 வயது மகள் அக்க்ஷயா தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வந்தார்.

 

நேற்று இரவு குளத்தூரில் பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மகள் அக்க்ஷயாவுடன் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார் சாண்ட்ரியன். சுற்றி வருவதை தவிர்ப்பதற்காக மூலக்கடை மேம்பாலத்தில் பக்கவாட்டு சாலையில் தவறான வழியில் சென்றுள்ளார்.

 

அப்போது எதிரே வேகமாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி அக்க்ஷயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.


Leave a Reply