புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஆர்.வி. ஜானகிராமன் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். திமுக சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்ட அவர் அமைச்சராக பணியாற்றியுள்ளார். 1996 முதல் 2000 மாவது ஆண்டு வரை புதுச்சேரி முதலமைச்சராக பதவி வகித்தார்.
ஆம்பூர் சாலையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள ஜானகி ராமன் உடலுக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். ஜானகி ராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்றும் அறிவித்தார்.