புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்தவர் இளையராஜா, 28. இவர் இராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவனை எதிரே உள்ள பேக்கரியில் மாஸ்டராக கடந்த 5 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், இன்று மாலை 6 : 45 மணியளவில் பேக்கரி இயங்கும் மாடியில் உள்ள அறையில் ஓய்வெடுத்தாக கூறப்படுகிறது. அப்போது, பேக்கரியில் சப்ளையராக வேலை பார்க்கும் பெருங்களூர் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவர், தனது கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு தப்பி ஓடியதாக இளையராஜா ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆபத்தான நிலையில் உள்ள இளையராஜாவுக்கு, இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து இளையராஜா மற்றும் பேக்கரி உரிமையாளர், ஊழியர்களிடம் பஜார் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தநிலையில் சக்தியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.